Sunday, April 18, 2010

ஈழத்துப் பாப்பா பாடல்

*ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ
*
*ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா
பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ
பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா

சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில்
சீறும் விமானம்வரும் பாப்பா
எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர்
எவரும் இல்லையடி பாப்பா

சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை
இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா
வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம்
மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா

பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன்
வகைவகையாய் வீசினான் குண்டை
புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து
நகைக்கிறான் எதிரி பாப்பா

தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி
நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா
பொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று
பேய்களின் ஆட்சியடி பாப்பா

யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின்
சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா
இரத்ததில் தோய்கிறோம் பாப்பா - நாம்
மொத்தத்தில் பாவிகளடி பாப்பா

காக்கை குருவிஎங்கள் ஜாதி - இவற்றோடு
காட்டில் வாழ்கிறோம் பாப்பா
தேளும் பாம்பும் புடைசூழ - நாம்
நாளும் வாழ்கிறோம் பாப்பா
தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா - நம்
தலைவிதி இதுதான் பாப்பா




Tuesday, April 6, 2010

அதிசய ராகம் ஆனந்த ராகம்

திரைப்படம்: அபூர்வ ராகங்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்,
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டி: 1975

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம்

வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்.... மோகம்.... மோ..கம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திர லோகத்து சக்கரவாகம்

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் - அந்த
தேவதை கிடைத்தால் அது என் யோகம் - அது என் யோகம்

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்



ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்

திரைப்படம்: அன்புக் கரங்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தப் பாருங்க
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் - அந்த
நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் - அந்த
நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா?
உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகததை நிறுத்த முடியுமா?

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே - அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே - அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை - இதைப்
புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் - நாம்
நேர் வழியில் நடந்து சென்றால் நன்மையடையலாம்

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்



Monday, April 5, 2010

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்

திரைப்படம்: அன்பே வா
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா


ஆண்டு: 1966


நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

இடையோ இல்லை இருந்தால் முல்லைக்
கொடி போல் மெல்ல வளையும் சின்னக்
குடை போல் விரியும் இமையும் விழியும்
பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே குளிர்ப்
புன்னகை வருவதினாலே நிலவோ மலரோ எதுவோ

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ?
இந்தக் காதலி சுகம் பெறுவாளோ
கனவோ நனவோ எதுவோ?

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்




Sunday, April 4, 2010

அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே

திரைப்படம்: சின்னக் கவுண்டர்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
பாடியவர்: இளையராஜா

அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு? அது மன்னவன் பேரு

அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே

மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி
வாரி வாரித் தூத்தும் இனி யாரு உனக்கு நாதி?
பாசம் வைத்ததாலே நீ பயிரைக் காத்த வேலி
பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி
சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா?

விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு? அது மன்னவன் பேரு

அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே

நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு?
துன்பம் வந்த போதும் அதைத் துடைப்பதிங்கு யாரு?
கலங்கும் போது சேறு அது தெளியும் போது நீரு
கடவுள் போட்ட கோடு அதத் திருத்தப் போவதாரு?
வெந்த புண்ணும் ஆறிடுமா? வேதனை தான் தீர்ந்திடுமா?

விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு? அது மன்னவன் பேரு

அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே

மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு? அது மன்னவன் பேரு

அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே



Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts