Friday, April 14, 2017

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

மகாதேவி படத்திற்காக இந்தப்பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
================================================================================

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா _ வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

Bookmark and Share

Saturday, April 8, 2017

காற்று வெளியிடை

காற்று வெளியிடைக் கண்ணம்மா;-நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்; அமு
தூற்றினை ஒத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! - இந்தக் (காற்று)
நீ யென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே- என்றன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்
தீயினி லேவளர் சோதியே-என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே-இந்தக் (காற்று)

Bookmark and Share

Sunday, April 2, 2017

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்

படம்: டிஷ்யூம்
பாடகர்: ஜெயதேவ்
மியுசிக் டைரக்டர்: விஜய் அண்டனி
வரிகள்: வைரமுத்து 

.. நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் ..
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் ..
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
காதல் தானே ..
இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் ,
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழி த்து விட்டேன் ,
இன்னும் போக மறக்கவில்லை …

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் ..
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் ..
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
காதல் தானே ..
இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் ,
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழி த்து விட்டேன் ,
இன்னும் போக மறக்கவில்லை …

எ …
விண்ணை தொடுகின்ற முகிலை ..
வெள்ளி நினைவை .. மஞ்சள் நட்சத்திரத்தை ..
என்னை தேடி மண்ணில் வரவழைத்து உன்னை காதலிப்பதை உரைத்தேன் ..
இன்று பிறக்கின்ற பூவுக்கும் .. சிறு புல்லுக்கும் ..
காதல் உரைத்து முடித்தேன்
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் ,
இன்னும் சொல்லவில்லையே இல்லையே …
லட்சம் பல லட்சம் இங்கு தாய் மொழியில் சொல்லிருக்க
ஒத்த சொல்லு சிக்கவில்லை எதனாலே ..
பந்தி வச்ச வீட்டுகாரி பாத்திராத கழுவிட்டு
பட்டினியா கலைப்பாளே
அது போலே ..

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் ..
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் ..
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
காதல் தானே ..
இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் ,
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழி த்து விட்டேன் ,
இன்னும் போக மறக்கவில்லை …

சின்ன சின்ன செல்ல குறும்பும் ,
சீனி சிரிப்பும் , என்னை சீரழிக்குதே ..
விறு விறுவென வளரும் பழம் எந்தன் விரதங்களை வெல்லுதே ..
உன்னை கரம் பற்றி இழுத்து ,
வலை உடைத்து , காதல் சொல்லிட சொல்லுதே …
வெட்கம் இரு பக்கம் மீசை முளைத்து
என்னை குத்தி குத்தியே கொல்லுதே …
காதல் என்ற நீதி வழி ,
கைய வீசி வந்த பின்னும்
கால் தடுக்க காத்திருக்கு எதனாலே ?
பிப்ருஅரி மாதத்துக்கு நாளோன்னு கூடிவர
ஆண்டு நாலு காத்திருக்கும் , அது போலே …

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் ..
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் ..
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
காதல் தானே ..
இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் ,
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழி த்து விட்டேன் ,
இன்னும் போக மறக்கவில்லை …

Bookmark and Share

Saturday, April 1, 2017

அழகெல்லாம் முருகனே LYRICS


பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்

அழகெல்லாம் முருகனே ...
அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ...
தெய்வமும் முருகனே
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே

பழஞானப் பசியாலே ...
பழநிக்கு வந்தவன்
பழமுதிர்ச்சோலையிலே ...
பசியாறி நின்றவன்
... பசியாறி நின்றவன்
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே

குன்றெல்லாம் ஆள்பவன் ...
குகனாக வாழ்பவன்
குறவள்ளிக் காந்தனவன் ...
குறிஞ்சிக்கு வேந்தனவன்
பூவாறு முகங்களிலே ...
பேரருள் ஒளிவீசும்
நாவாறப் பாடுகையில் ...
நலம்பாடும் வேலனவன்
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே.



Bookmark and Share

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts